1 மில்லியன் லிட்டர் அணுமின் நிலைய கழிவுநீரை கடலுக்குள் கொட்டப்போகும் ஜப்பான் எதிர்க்கும் உலக நாடுகள்!
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவுகோலில் 9.0 புள்ளிகள் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
மேலும் உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால் அனுஉலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது.
இதனால்3 யூனிட்கள்சேதம் அடைந்தது இதனால்சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது.
தற்போது 10 ஆண்டுகள் கடந்தும் அங்கு மக்கள் வசிக்க முடியாத அளவிற்குகதிர்வீச்சின் தாக்கம் இன்னும் உள்ளது
ஜப்பானின் புகுஷிமா அணுஉலை இப்போது பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் அங்குள்ள அணுக்கழிவுகளை சுத்திகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அணுக்கழிவுகள் அகற்றப்பட்ட கழிவுநீரை தற்போது கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்கு சர்வதேச அணு சக்தி முகமை (IAEA) ஒப்புதல் வழங்கியுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்