Breaking News

இனி RTO ஆபிஸ் செல்லாமல் ஆன்லைனிலேயே 18 சேவைகள் விண்ணப்பிக்கலாம்.....

அட்மின் மீடியா
0

தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) வழங்கப்படும்  18 சேவைகளைத் தற்போது இணையத்தில் எளிய முறையில் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: 

ஆதார் அடிப்படையிலான சரிபார்த்தல் முறையின் மூலம் 18 விதமான சாலைப் போக்குவரத்து சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும். 

இதற்கு 12 இலக்கு ஆதார் எண்ணை ஓட்டுநர் உரிமம்மற்றும் வாகனப் பதிவு சான்று ஆகியவற்றுடன் இணைத்தால் போதுமானது. 


எல்எல்ஆர் சான்று, 

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், 

ஓட்டுநர் உரிமத்தின் நகல், 

தற்காலிக மோட்டார் வாகனப் பதிவுக்கான விண்ணப்பம், 

முழுவதுமாகக் கட்டுமானம் செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம், 

மேலும் வாகனப் பதிவு சான்றிதழின் நகல், 

வாகனப் பதிவுக்கான என்ஓசி சான்று, 

உரிமச் சான்றிதழில் முகவரி மாற்றம், 

பதிவுச் சான்றிதழ், 

சர்வதேச ஓட்டுநர் அனுமதி, 

மோட்டார் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், 

வாகனப் பதிவுசான்றிதழில் முகவரி மாற்ற அறிவிப்பு, 

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சி பதிவுக்கான விண்ணப்பம்

வாடகை வாகன ஒப்பந்த சான்று 

உள்ளிட்ட வசதிகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback