Breaking News

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்.!

அட்மின் மீடியா
0

7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

 


7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரை அழைப்பதற்கான மசோதாவுக்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு வைத்த பரிந்துரையை ஏற்று ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. 

அதன்படி, குடும்பன், காலாடி, பன்னாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உள்பிரிவினரை இணைத்து இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.



Tags: தமிழக செய்திகள்

Share this