மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த நபர் !! சாதுர்யமாக காப்பாற்றிய வாலிபர்! சிசிடிவி வைரல் வீடியோ
மாடியில் இருந்து மயங்கி கீழே சரிந்த தொழிலாளி உயிரை காப்பாற்றிய வாலிபர்: சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே வடகரையில் உள்ள வங்கியில் பணம் எடுக்க வந்த பாபுராஜ் வங்கிக்கு வெளியே பால்கனியில் காத்து கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு பக்கத்தில் இருந்த நபர் ஒருவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி மாடியில் இருந்து வெளியே சரிந்தார்.
அவர் மாடியில் இருந்து தவறி தலைகீழாக விழும்போது அருகில் நின்றுகொண்டிருந்த பாபுராஜ் உடனடியாக அவரது கால்களை கெட்டியாக பிடித்து கொண்டடு கூச்சலிடவே அங்கு நின்றிருந்தவர்கள் ஓடிவந்து கீழே வுந்தவரை மேலே தூக்கி காப்பாற்றினர்.
அந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Mr. Baburaj ( blue shirt) saves life of Mr Binu who fell unconsciously while standing in front of a Bank near Vadakara, Kozhikkode district , Kerala. A big salute to Mr Baburaj. 🙏🙏🙏 pic.twitter.com/r757JN2fyr
— RamesanMazhamangalam (@rmsnbdri) March 19, 2021
Tags: தமிழக செய்திகள்