இனி புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி!
வழக்கமாக வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு கொண்டுச் செல்லும் வாக்காளர் சீட்டில் புகைப்படம் இருக்கும். இம்முறை வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் வாக்காளர் புகைப்படம் இருக்காது, தகவல் சீட்டாக மட்டுமே அளிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்
அந்த வாக்காளர் தகவல் சீட்டில்
வாக்குச் சாவடி மையம்,
வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம்
ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே அனைத்து வாக்காளர் தகவல் சீட்டினையும் விநியோகிக்க அனைத்து வாக்காளர்களுக்கும் கிடைக்கும் என சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்