மதரஸாக்களுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோரே என பரவும் வீடியோவின் உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மத்ரஸாக்களில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோரே அங்கு சிலர் உஸ்தாது என்கிற பெயரில் நடத்தும் கொடுமைகள் வெளியில் சொல்ல முடியாதவை. இக்காணொளியைக் கண்டு யார் என்று கண்டு பிடித்துத் தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும்.தன் மகனாக இருந்தால் இப்படி அடிப்பார்களா? என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
பலரும் ஷேர் செய்யும் இந்த சம்பவம் பங்களாதேஷ் நாட்டில் நடந்தது
அந்த பிஞ்சு மாணவனை அடித்து கொடுமைப்படுத்திய மதரசா ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டான்
ஆனாலும் அந்த மாணவனின் பெற்றோர்கள் அந்த மதரசா ஆசிரியரை தண்டிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதனால் விடுவிக்கப்பட்டு விட்டார்
ஆனால் சிலர் அந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது போல் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி