Breaking News

புதிய வண்ண வாக்காளர் அட்டை தபால் மூலம் வீடு தேடி வர ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி!!!

அட்மின் மீடியா
0

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கு ஆனால் வாக்காளர் அட்டை இல்லை  புதிய வண்ண வாக்காளர் அட்டை வாங்க என்ன செய்யனும்






உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா?

எனது  வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டது புதிய வாக்காளர் அட்டை வாங்க  என்ன செய்யவேண்டும்?

கவலை வேண்டாம்.. அலைய வேண்டாம்.. கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆனலைனில் விண்ணப்பிக்கலாம் 
 
 
எப்படி விண்ணப்பிப்பது ?

முதலில்  https://voterportal.eci.gov.in/ என்ற லின்ங்கை கிளிக் செய்து அதில் புதியதாக அக்கவுண்ட் கிரியேட் செய்து அதில் லாகின் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து அதில் replacement of voter id என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் ஸ்டார்ட் கொடுத்து அதில்  yes i have voter id nember என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து proceed என்பதை கிளிக் செய்யுங்கள்


 

அடுத்து உங்கள் வாக்காளர் அட்டை விவரம் வரும் அடுத்து அதில் contune என்பதை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண் கேட்கும் அதில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்து மொபைலுக்கு வரும் ஓடிபியையும் பதிவு செய்யுங்கள்

 அடுத்து அதில் புதிய வாக்காளர் அட்டை எதற்க்காக வேண்டும் என கேள்வி கேட்கும் அதில் பழைய வாக்காளர் அட்டை தொலைந்து விட்டது, அல்லது கிழிந்து விட்டது என ஏதாவது ஒரு காரணம் பதிவு செய்யுங்கள் 

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் வாக்காளர் அட்டையை தபால் மூலம் பெற என்பதை கிளிக் செய்து  contune கொடுங்கள்

 

இறுதியாக நீங்கள் விண்னப்பித்த விவரங்கள் அனைத்தும் வரும் அதனை சரிபார்த்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான் 

புதிய பிவிசி வண்ண வாக்காளர் அடையாள அட்டை உங்கள் வீடு தேடி தபால் மூலம் வரும் அப்போது அஞ்சல் அலுவலரிடம் ரூபாய் 30 கொடுத்து உங்கள் வாக்காளர் அட்டையை பெற்றுகொள்ளலாம் 

 

 விண்ணப்பிக்க:

 https://voterportal.eci.gov.in/

 

எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி வீடியோ மூலம் தெரிந்து கொள்ள?

 

https://www.youtube.com/watch?v=4OpsnGnDU4w 

 

 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback