திமுக கூட்டணிக்கு ஆதரவு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணிக்கு ஆதரவு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
இன்று காலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயற்குழுக் கூட்டம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் சென்னை மண்ணடியில் உள்ள மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில் தமிழகத்தில் பாசிசத்தை வீழ்த்தவும் தமிழக மக்களின் நலன் கருதியும், சமுதாய நலனை முன்னிறுத்தியும், ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது
என்று எஸ்.எம்.பாக்கர் தெரிவித்தார்.