Breaking News

பாமக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! முழு விவரம்

அட்மின் மீடியா
0

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் முதல்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 10 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியானது.

23 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, 


மேட்டூரில் சதாசிவம் என்பவரும் , 

பூந்தமல்லியில் ராஜமன்னார் என்பவரும் , 

சங்கராபுரத்தில் ராஜா என்பவரும் , 

வந்தவாசியில் முரளி சங்கர் 

என்பவரும் போட்டியிடுகின்றனர்.என கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

 பாமக  முதல் மற்றும் இரண்டாம்  கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியீடு! முழு விவரம்

https://www.adminmedia.in/2021/03/breaking_10.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback