FACT CHECK: டெல்லியில் விவசாயிகளை ஆதரித்த பெண்கள் டிராக்டர் ஏற்றி கொலையா? உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய பெண்கள் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் டெல்லியில் நடக்கவில்லை மாறாக அந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமீர்தசரஸில் நடந்தது ஆகும்
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டவில்லை
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமீர்தசரஸில்vஇவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் அப்பகுதியில் தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் கட்டுபாட்டை இழந்து போரட்டத்தில் இருந்தவர்கள் மீது மோதி விபத்து நடந்துள்ளது
மேலும் இது குறித்து அமிர்தசரஸ் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் அவர்கள் போராட்டத்தில் பங்கேற்க சென்ற ஐந்து பெண்கள் மீது டிராக்டர்
மோதியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம்
அடைந்துள்ளனர். கிராம மக்கள் டிராக்டர் டிரைவரை பிடித்து போலீசில்
ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று கூறியதாக
குறிப்பிட்டிருந்தனர்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி