Breaking News

Budget 2021மத்திய பட்ஜெட் தாக்கல்., என்னென்ன சலுகைகள்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 



அதில் மிக முக்கியமாக 


நாடு முழுவதும் மேலும் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் அமைக்கப்படும். 

எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு (IPO) வெளியீடு திட்டம் அறிமுகம். 2 பொதுத்துறை வங்கி, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப்படும். 

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும். 

பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும். 

விவசாயிகளுக்கு வரும் நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க திட்டம். 

75 வயதுக்கு மேற்பட்டோர் ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை நம்பியிருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டுக்கடன் வட்டிக்கு சலுகை நீட்டிப்பு. ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டு கடன் வட்டி சலுகை மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு

எல்.ஐ.சி.,யில் பொது முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனிநபர் வருமான வரி விதிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback