BREAKING:- சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து ! 11பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 25 பேர் வேலை செய்து வந்துள்ளனர்.
இன்று தொழிற்சாலையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த 6 அறைகளிலும் பரவியது இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளார்கள் காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்