Breaking News

BREAKING NEWS: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வரும் மே 24ம் தேதியுடன் 15வது தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது எனவே மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன  எனவும் 


தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு 

தேர்தல் குறித்த அறிவிப்பு வருமாறு:

வேட்பு மனு தாக்கல் தேதி: மார்ச் 10

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20

வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22

வாக்குப்பதிவு: ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை: மே 2


தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்புதொகுதிகளில் தேர்தல்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback