Breaking News

BREAKING : கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாயம் 7 நாட்கள் வீட்டுத்தனிமை: தமிழக அரசு

அட்மின் மீடியா
0

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



கொரானா பரவலை கட்டுபடுத்த கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அறிவிப்பில், 'கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் தங்களை 7 நாட்கள் கட்டாயமாக வீட்டுத்தனிமையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த 7 நாட்கள் தங்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்களில், காய்ச்சல், சளி, மூச்சுத்தினறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback