Breaking News

BREAKING : மீண்டும் கனமழை..அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் !!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 


 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 

கடலூர், 

விழுப்புரம், 

கள்ளக்குறிச்சி, 

ராணிப்பேட்டை,

வேலூர்,

திருவண்ணாமலை, 

சேலம், 

நெல்லை, 

தேனி, 

திருநெல்வேலி,

தர்மபுரி,

கிருஷ்னகிரி,

நீலகிரி, 

உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  


 

நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வுமைய அறிக்கை

http://imdchennai.gov.in/tn_fc.pdf

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்த நிலையில், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback