வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்டஆட்சியர் அறிவிப்பு!
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்டஆட்சியர் அறிவிப்பு!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையினை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை:தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் பயனடையும் வகையில் ஒரு வேலைவாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வந்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/01/2021012355.pdf
Tags: முக்கிய செய்தி