இனி அமீரகத்திலேயே சர்வதேச டிரைவிங் லைசன்சை புதுப்பித்துக் கொள்ளலாம்..!! எப்படி??
அட்மின் மீடியா
0
சர்வதேச இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அனைத்து வேலை நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை) அலுவலக நேரங்களில் (காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை) தூதரகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்
தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட்,
DP எண்
இந்திய ஓட்டுநர் உரிமம்
இதற்கான கட்டணம் எவ்வளவு
தூதரக சேவை கட்டணம் 40 திர்ஹம்
இந்திய சமூக நல நிதி (ICWF) கட்டணமாக 8 திர்ஹம்
Tags: வெளிநாட்டு செய்திகள்