பால் விற்பனை செய்ய ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்!! வீடியோ
இந்திய விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்ய சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் போரி என்ற விவசாயி இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார் மேலும் இவர் விவசாயம் மட்டுமல்லாமல் பால் வியாபாரம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார்.
பால் விற்பனைக்காக இவர் அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது.ஆனால், இப்பகுதிகளுக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தததால் ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும் இதற்காக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பைலட் அறை, ஹெலிபேட் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து வருகிறார்.
வீடியோவை பார்க்க
https://www.youtube.com/watch?v=b8rz-csCmZY
Tags: வைரல் வீடியோ