அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா (இன்று) திங்கள்கிழமை தமிழகம் வருவதை ஓட்டி தமிழக கா்நாடக மாநில எல்லையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.
இன்று தமிழக வரும் சசிகலாவை வரவேற்க அவரது தொண்டர்கள் மிகவும் ஆவலுடன் தயார் நிலையில் உள்ளனர்.
கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் துவங்கி, சூசூவாடி, ஒசூா், சிப்காட், சூளகிரி, சின்னாறு, கிருஷ்ணகிரி, சென்னை வரை பல இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். அதற்கான ஏற்பாடுகளை அமமுக நிா்வாகிகள் செய்து வருகிறாா்.
சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சசிகலா பேரணியாக செல்ல உள்ள இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலை 8.00 மணிக்கு
பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ள சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் புகாரால் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா
Tags: தமிழக செய்திகள்