Breaking News

முகமது நபி குறித்து அவதூறு பேச்சு : கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அட்மின் மீடியா
0

முகமது நபி அவர்களை குறித்து அவதூறாக பேசிய பாஜக கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

 

 


கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கல்யாணராமன், இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசினார். 

இதை கண்டித்து, அந்த நிகழ்ச்சியின் போதே இஸ்லாமியர்கள் கல்யாணராமன்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போடவேண்டும் என ஆர்பாட்டங்கள் நடத்தினர்

மேலும் கல்யானராமன் மீது பல காவல்நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது  இந்நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback