பஸ் ஸ்டிரைக் தொடரும் - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அரசு போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்ததால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னையில் நடந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ சவுந்திரராஜன், அரசு போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றும் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்