புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை
அட்மின் மீடியா
0
புதுவை சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடக்க உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
அதன்படி தமிழகம், கேரளா மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று தேர்தல் நடக்கிறது.
புதுச்சேரி தேர்தல் குறித்த அறிவிப்பு:
வேட்புமனு தாக்கல் தேதி: மார்ச் 10
வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22
வாக்குப் பதிவு: ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை: மே 2
வேட்பு மனுவை இதுவரை நேரில் மட்டுமே தாக்கல் செய்து வந்த நிலையில் ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம் என முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கைTags: தமிழக செய்திகள்