Breaking News

தஞ்சை, நெய்வேலி, வேலூர், சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் 5 இடங்களில் புதிய விமான நிலையங்கள் - மத்திய அரசு

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒத்துக்காட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் தமிழகத்தில் விமான சேவைகள் விரிவாக்கம் குறித்து திமுக எம்பி வில்சன் எழுப்பிருந்தார். 

இதற்கு பதில் கூறிய மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் ஹர்தீப் சிங், தமிழகத்தில் விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.195 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியுதவி 5 இடங்களில்  விமான நிலையம் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தப்படும் எனவும் தஞ்சை, நெய்வேலி, வேலூர், சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் விமான சேவைகளை தொடர்ந்து இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback