வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை: புதிய நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்யலாம் என்ற திட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதாவது தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது சட்டம். அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், வேலை நேரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்றால் நான்கு நாட்கள் வேலை செய்யலாம் அல்லது ஒரு நாட்களுக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் ஐந்து நாட்கள் வேலை செய்யலாம் அல்லது எட்டு மணி நேரம் என்றால் 6 நாட்கள் வேலை செய்யலாம் என மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய விதிகளின்படி, ஒரு வாரத்தின் வேலை நாட்களை, நான்கு நாட்களாக குறைத்து கொள்ளலாம். இதை, சுய விருப்பத்தின் அடிப்படையில், நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம் இது கட்டாயாமும் இல்லை
அவ்வாறு நான்கு நாட்கள் வேலை நாட்களாக இருக்கையில், மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்