Breaking News

வாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0

டெலிகிராம் என்பது whatsapp போலவே ஒரு social network site ஆகும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் போன்றதுதான் இந்த டெலிகிராம் ஆப் 



1. டெலிகிராம் எப்போது துவங்கபட்டது

தகவல் பரிமாற்றம் செய்யும் டெலிகிராம் செயலி கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது


2. டெலிகிராம் எந்த நாட்டு செயலி

டெலிகிராம் செயலி  ரஷ்யாவை சேர்ந்த பவல் துரவ் என்பவரால் உருவாக்கப்பட்டது.


3. இரகசிய அரட்டை

நீங்கள் அரட்டையில் விவாதிக்கும் முக்கியமான விசயங்களை உங்களுடன் அரட்டையில் இருப்பவர் வேறு யாருக்கும் ஃபார்வர்டு செய்யக்கூடாது என்று விரும்பினால் இந்த இரகசிய அரட்டை சீக்ரெட் சாட் முறையில் அரட்டை அடிக்கலாம். 

இந்த தகவலானது எந்த சர்வரிலும் சேமிக்கப்படுவதில்லை. மேலும் நீங்கள் அனுப்பும் தகவலை உங்கள் எதிர்முனையில் உள்ளவர் மற்றொருவருக்கு பார்வேர்ட் செய்யவோ, நகல் (copy) எடுத்து அனுப்பவோ முடியாது.

Screenshot மற்றும் screen recording செய்ய முயற்சித்தாலும், திரையில் எந்த தகவலும் இருக்காது. அதாவது முழுவதும் கருப்பாகவே (black screen) காட்சியளிக்கும். 

குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அரட்டை தானாகவே அழிந்து விடுமாறும் வைக்கலாம் 


4. சாட்பாட் youtube வீடீயோக்களை தேடும் வசதி


நீங்கள் ஒருவருடன் chat செய்யும் போது,youtube-ல் உள்ள ஏதாவது ஒரு வீடியோவை அனுப்ப விரும்பினால்  யூடியூப்  செல்ல வேண்டாம்  

அதற்க்கு நீங்கள்  மெசேஜ் chat bar-ல் @youtube என டைப் செய்து  இடைவெளி விட்டு பின் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவின் தலைப்பை  டைப் செய்தால் அந்த வீடியோ உங்களுக்குடெலகிராமில் வரும்
for example : @youtube adminmedia அதனை  இதை அப்படியே டெலகிராமிலும் ஷேர் செய்யமுடியும்

அதே போல் gif இமேஜ்களையும் ஷேர் செய்யலாம் .உதாரணத்திற்கு @gif happy என்று டைப் செய்தால் மகிழ்ச்சியான முகபாவனைகளை உடைய ஜிப் இமேஜ்களை வரும் 



5. ஷேர் செய்த மெசஜை எடிட் செய்யும் வசதி

சில நேரங்களில் நீங்கள் மெசேஜ் செய்யும் போது தவறுதலாக  டைப் செய்து அனுப்பிவிட்டால் அந்த மெசேஜை டிலைட் எவரிஒன்  செய்துவிட்டு புதிதாக ஒரு மெசஜை type செய்து அனுப்புவீர்கள். 

ஆனால் டெலெக்ராமில் இந்த கவலை இல்லை.  நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெசேஜை செலக்ட்  செய்தால்  மேலே ஒரு எடிட் சிம்பல் தோன்றும்.   

அதை கிளிக் செய்து நீங்கள் உங்கள் மெசஜை திருத்தி சப்மிட் செய்தால் போதும். 

6. உங்கள் மொபைல் நம்பரை யாரும் பார்க்காதவாறு மறைக்கலாம்!!!


டெலிகிராமில் செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்து,அதில் accounts என்ற பகுதிக்கு செல்லவும். 

அதில் உங்கள் மொபைல் நம்பருக்கு கீழே இருக்கும் username என்ற tab-ஐ  கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பெயரை அதில் பதிவிடவும்.  

இதை செய்தவுடன் உங்கள் டெலெக்ராம் அக்கவுண்ட்டுக்கான லிங்க் ஒன்று உருவாக்கப்படும். இப்போது privacy and security  என்ற பகுதிக்கு சென்று phone number என்ற இடத்தை கிளிக் செய்து nobody என்று கொடுத்துவிட்டால் உங்களது மொபைல் நம்பர் மறைக்கப்பட்டு உங்களது user name மட்டுமே மற்றவர்களுக்கு காண்பிக்கப்படும்.  

அதற்க்கு பிறகு உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, உங்கள் மொபைல் எண்ணைத் தெரிந்து கொள்ள முடியாது.



7. நாம் அனுபிய தகவல்கள் தானாகவே டிலைட் ஆகும் வசதி


நாம் டெலகிராமில் போட்டோ,வீடியோ அல்லது டாக்குமெண்ட் என ஏதாவது  அனுப்புவோம் அப்படி நாம் அனுப்பிய மெசஜை அவர்கள் பார்த்துவிட்ட பின்பு  அந்த மெசஜை தானாகவே டிலைட் ஆக வைக்கலாம்

டெலகிராமில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அதில் மல்டிமீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து  அதில் போட்டோ,வீடியோ அல்லது டாக்குமெண்ட் என செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

பின்பு அதில் கீழ் உள்ள எடிட் option-ல் உள்ள கடிகார clock  சிம்பலை கிளிக் செய்து  அதில்  self destructive டைமரில் 1 செகண்ட் முதல் 1 நிமிடம் வரை செட் செய்து கொள்ளலாம் அல்லது உங்களுக்கு தேவைப்படும் கால அளவை செட் செய்து அனுப்பினால் போதும்.

நீங்கள் யாருக்கு ஷேர் செய்தீர்களோ அவர்கள் அந்த மெசஜை  பார்த்த பின்பு நீங்கள் செட் செய்த கால அளவு முடிந்தவுடன்  தானாகவே அந்த மெசஜ் அழிந்து விடும்


8. வேண்டிய நேரத்தில் மெசஜ் தானாக ஷேர் செய்யும் வசதி

நீங்கள் யாருக்கேனும்  ஒரு முக்கியமான மெசேஜை குறிப்பிட்டநாள் மற்றும் குறிப்பிட்ட  நேரத்திற்கு அனுப்ப  முடியும்

அதற்க்கு நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜை டைப் செய்து send button-ஐ அழுத்தி பிடித்தால் scheduled message என்று இருக்கும். இதை கிளிக் செய்து நீங்கள் அனுப்ப விரும்பும் காலம்,நேரம் போன்ற விவரங்களை கொடுத்துவிட்டால் போதும் நீங்கள் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்க்கு அந்த மெசஜ் தானாக ஷேர் ஆகிவிடும்


9. 2 ஜிபி  அளவுடைய பைல்களை அனுப்ப முடியும்

டெலிகிராமில் நீங்கள் அதிகபட்சமாக 2 ஜிபி வரையிலான வீடியோக்களை அனுப்பவும், பெறவும் முடியும். 


10. நீங்கள் அனுப்பும் மெசஜ் அவர்களுக்கு சவுண்ட்  இல்லாமல்அனுப்பும் வசதி 


நாம் யாருக்கேனும் மெசஜ் அனுப்பும் போது அந்த மெசேஜ்  send without sound என்ற வசதியை பயன்படுத்தி அனுப்பினால்  அந்த மெசஜை எந்த அறிவிப்பும் இல்லாம்ல் அவர்களுக்கு செல்லும் sound


அதற்க்கு மெசேஜ் டைப் செய்த பிறகு send button-ஐ அழுத்தி பிடிக்க வேண்டும். இப்போது  send without sound என்ற ஒரு option திரையில் தோன்றும். இதை கிளிக் செய்தவுடன் உங்கள் மெசேஜ் எந்த சத்தமும் இல்லாமல் போய் சேர்ந்து விடும்.


11. நமக்கு அருகில் டெலகிராம் யார் வைத்து உள்ளார்கள் என பார்க்கமுடியும் சேட் செய்யமுடியும்


டெலகிராமில் நமக்கு அருகில் எவ்வளவு  தூரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள "ஹவ் பார் அவே" எனும் சேவை டெலிகிராமில் உள்ளது. 
இதை செயல்படுத்த கான்டாக்ட் லிஸ்ட்  சென்று  FIND PEPOLE NEAR BYஎன்பதை தேர்வு செய்து  அதில் மேக் மைசெல்ஃப் விசிபில் என்பதை கிளிக் செய்தால் போதும் அவ்வளவுதான் நமக்கு அருகில் யார் உள்ளார்கள் என பார்க்கமுடியும்


12. கணக்கில்லா உருப்பினர்களை கொண்டு சேனல் ஆரம்பிக்கலாம்

Telegram ல் குழுக்களை Groups மற்றும் Channels என்று இரண்டு வகையாக அமைக்கலாம். 

டெலகிராம் குரூப்பில் 200 நபர்கள் வரை அதிகபட்சம் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால், Telegram Channel களில் நீங்கள் எத்தனை ஆயிரம் பேரை வேண்டுமானாலும் இனைத்து கொள்ளலாம் என்பது இதன் தனி சிறப்பு

மேலும் டெலகிராமில் உங்கள் சேனலுக்கு என்று உள்ள பெயரை வேறு யாரும் பயன்படுத்தமுடியாது நீங்கள் நிரந்தர பெயர் செட் செய்து கொள்ளமுடியும்.  

மேலும் Channel ல் அதை create செய்தவர் மட்டுமே பதிவுகள் போட முடியும். உறுப்பினர்கள், பதிவுகளை பார்வையிட்டு, மற்ற குழுக்களில் வேண்டுமானால் Forward செய்யலாம். 

மெசஜ் ஷேர் செய்ய நீங்கள் மற்றவர்களை அட்மின் ஆக்கலாம் 

குரூப்பில் எத்தனை உறுப்பினர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று பார்க்கும் வசதி டெலிகிராமில் உண்டு. 

மேலும் உங்கள் சேனலை 'பப்ளிக்' ஆகவும் வைத்துக் கொள்ளலாம். சர்ச் செய்தால் அதில் தேடி யார் வேண்டுமானாலும் உங்கள் சேனலில்  சேர்ந்து கொள்ளலாம்.

13. எப்போதும் அழியாத உங்கள் தகவல்கள்


டெலிகிராமில் பகிரப்படும் தகவல்கள் கிளவுட் எனப்படும் தனி இயங்குதளத்தில் சேமிக்கப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் பழைய தகவல்களை எடுத்து பார்க்கலாம்.

இதன் காரணமாக டெலகிராமின் பயன்பாட்டின் நீங்கள் உங்கள் டெலகிராமை டிலைட் செய்துவிட்டு மீண்டும் புதியதாக இன்ஸ்டால் செய்தால் முன்பு நீங்கள் உபயோகித்த அனைத்து செய்திகள், படங்கள், வீடியோக்கள் என உங்களுடைய முக்கிய பதிவுகள் அனைத்தும் அழியாமல் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் பாதுகாப்பாக இருக்கும். 

Whatsapp ல் அனைத்துமே local storage என்பதால், மொபைல் போனை format செய்தாலோ , மொபைல் தொலைந்துபோனாலோ அல்லது பார்மட் செய்தாலோ அதில் எதுவும் திரும்ப பெற முடியாது

14. டெலகிராம் கம்ப்யூட்டரில் உபயோகிக்கலாம்

டெலிகிராமினை நீங்கள் கணிணியில் உபயோகிக்க  Telegram for pc என்னும் சாப்ட்வேர் உள்ளது.  இதை நீங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் கணினி சாப்ட்வேர் டவுன்லோடு செய்ய https://desktop.telegram.org/


15. நமக்கு அனுப்பிய மெசஜ்களையும் Delete for everyone செய்யலாம்


நாம்  அனுப்பும்  மெசேஜ்களை அவர்களுக்கும் சேர்த்து டெலீட் செய்ய விரும்பினால் Delete for everyone என்ற அமசத்தினை பயன்படுத்தி டெலீட் செய்வோம். 

ஆனால் நமக்கு அனுப்பிய மெசேஜ்களை அவர்களுடைய  போனிலும் சேர்த்து உங்கள் போனிலேயே டெலீட் செய்யலாம்

இதை செய்வதற்கு நீங்கள் டெலீட் செய்ய விரும்பும் மெசேஜை செலக்ட் செய்து, டெலீட் option-ஐ கிளிக் செய்தால், also delete for என்று உங்கள் நண்பர் பெயருடன் தோன்றும் மெசெஜ் பாக்ஸ்-ஐ  கிளிக் செய்தால் போதும். உங்கள் நண்பருக்கும் சேர்த்து டெலிட் ஆகிவிடும்!!!


டெலகிராம் ஆப் டவுன்லோடு செய்ய

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger&hl=ta&gl=US


அட்மின் மீடியாவின் டெலகிராம் குருப்பில் இணைய

https://t.me/factcheckadminmedia



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback