Breaking News

FACT CHECK JIO அரிசி, பருப்பு வந்து விட்டதா ? பலரும் ஷேர் செய்யும் புகைப்படங்களின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  படத்தில் நீங்க பார்ப்பது அம்பானி ரிலையன்ஸ் ஜியோ jio பருப்பு மூட்டை.என்று  ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 








அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் புகைபடத்தில் உள்ள ஜியோ பருப்பு மண்டி  முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனமா என்றால் இல்லை 


மேலும் ஜியோ நிறுவனம் என்பது ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் மட்டுமே. 

அதற்கும், கோதுமை, பருப்பு கொள்முதல், விற்பனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை அந்நிறுவனமே தெளிவாக, தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

 மேலும்  உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் விற்பனைக்கென பிரத்யேகமாக, ரிலையன்ஸ் குழுமம் சார்பாக, Reliance Fresh, Reliance Smart, Reliance Market போன்ற நிறுவனங்களை கொண்டுள்ளது. எனவே, ஜியோ நிறுவனம், கோதுமை, பருப்பு கொள்முதல், விற்பனையில் ஈடுபடவில்லை என்பது தெளிவாக கூறலாம்

பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள  அதே பெயரில் சில மாறுதல்கொண்டு  விற்பனை செய்வதுண்டு. மார்க்கெட்டிங் அதிகம் கிடைக்கும் என்பதற்காக பெரிய நிறுவனங்களின் பிராண்டில் சில வியாபாரிகள் தங்கள் பொருளுக்கும் அதே பெயரில்  பெயர் வைத்து வியாபாரம் செய்வது உண்டு



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback