BREAKING NEWS: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை உச்சநீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.மேலும் மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு
மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் , மன், பிரமோத் குமார் ஜோசி, அலோக் குலாட்டி, அனில் தன்பாத் ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
Supreme Court stays the implementation of three farms laws until further orders pic.twitter.com/v3DdC4FEtQ
— ANI (@ANI) January 12, 2021
Tags: இந்திய செய்திகள்