ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்ட ம் விண்ணப்பிப்பது எப்படி
அட்மின் மீடியா
0
ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்ட மனு தாக்கல் செய்யலாம்
தகவல் அறியும் சட்டத்தின்படி எந்த ஒரு குடிமகன் பெற விரும்பும் தகவலுக்கு
30 நாட்களுக்குள் அரசு பதிலளிக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் மூலம் தகவல்
பெற ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தகவல் அறிய விரும்பும் நபர்கள் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆன் லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்க்கு விண்ணப்பிக்க
மனு 500 வார்த்தைகள் கொண்டதாக இருக்க
வேண்டும்.
500 வார்த்தைகளுக்கு மேல் உள்ளதாக இருந்தால் அதனை கூடுதல்
இணைப்பாக இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் பதிவு செய்யப்பட்ட மனு குறிப்பிட்ட துறைக்கு
அனுப்பப்பட்ட உடன் மனுதாரரின் மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்க்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூபாய் 10ஜ இன்டர்நெட்
பேங்கிங் மூலம் அல்லது கிரெடிட் கார்டு அல்லது டெபிட்
கார்டுமூலம் பணம் கட்டி விண்ணப்பிக்கலாம்.
Tags: முக்கிய செய்தி