மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ்!
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரின் தண்டனைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து 27-ம் தேதி மருத்துவமனையில் இருந்த நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அறிகுறிகள் இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் சசிகலா பெங்களூருவில் தங்கியிருந்து, பிப்ரவரி 3ஆம் தேதி அல்லது 5ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் சென்னை வரும்போது வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் ஏற்பாடு செய்வார்கள் என தெரிகின்றது
Tags: தமிழக செய்திகள்