வாக்களிக்க இனி சொந்த ஊருக்கு செல்லத் தேவையில்லை: விரைவில் வருகிறது புதிய முறை!
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடந்த இதுதொடர்பான நிகழ்வில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் வாக்களிப்பது பற்றி ஆய்வு நடந்து வருவதாக குறிப்பிட்டார்.
இதன் மூலம் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் தேர்தல் (Election)நாளில், சொந்த ஊரில் இல்லாமல் வேறு காரணங்களுக்காக, வேறு இடத்திற்கு சென்றவர்கள், மிகவும் வயதானவர்கள், ஆகியோர், தங்கள் வாக்குரிமையை தவறாமல் செலுத்தமுடியும் இதற்கான ஒத்திகை விரைவில் தொடங்கப்படும் என தேசிய வாக்காளட் தினமான இன்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஒத்திகைக்கு பின்னர், பரிசோதனை அடிப்படையில் இதனை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
Tags: தமிழக செய்திகள்