இந்தியாவில் கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு, தடுப்பூசிகளுக்கு அனுமதி
கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்குமாறு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் கோரியிருந்தது.
அதே போல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி தயாரித்துள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியையும் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணா் குழு சனிக்கிழமை பரிந்துரைத்தது.
இதனை ஆய்வு செய்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவினர், ' இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம்' என பரிந்துரை செய்திருந்தன தற்போது இந்த கோரிக்கைகளை ஏற்று தற்போது கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், இந்த தடுப்பூசிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Tags: இந்திய செய்திகள்