முத்தலாக் தடை சட்டத்தின்படி கணவனின் தாய் உட்பட உறவினர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
முஸ்லிம் பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் சட்டம், கடந்த 2019 ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்பட்டது.
முத்தலாக் சட்டப்படி முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்டலாம், அவரது தாய் உட்பட உறவினர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் காவல் நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்ததாக புகார் அளித்தார். இதன் பேரில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய்யப்பட்டது.
கணவரின் தாயார் ரஹ்னா ஜலால் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்த்தில் வழக்கு தாக்கல் செய்தார் அதில் அவருக்கு முன் ஜாமீன் தர கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து கணவரின் தாய் ரஹ்னா ஜலால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம் ஆண் ஒருவர் தனது மனைவியிடம் தலாக் கூறுவது, முத்தலாக் தடை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் குற்றமாகும். இந்த சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். மேலும் இந்த சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்ட முடியும். அவரது தாய் மீது குற்றம் சாட்ட முடியாது என கூறிய நீதிபதிகள்
மேலும் முத்தலாக் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும் இதற்கு புகார் அளித்த பெண்ணை அழைத்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ், இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் ஜாமீன் வழங்க இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றவியல் சட்டம் 7 சி-யின் கீழ், முன் ஜாமீன் வழங்குவதற்கு எவ்வித தடையும் கிடையாது. அதன் அடிப்படையில், புகார் அளித்த முஸ்லிம் பெண்ணின் முன் அனுமதியுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் அளிக்கலாம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
SOURCE:
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி