Breaking News

திமுக பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்பா? திமுக தலைமை விளக்கம்.

அட்மின் மீடியா
0

திமுகவின் "இதயங்களை இணைப்போம்" மாநாடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஜனவரி 6 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். 



திமுக நடத்தும் இந்த இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் , புகைபடங்கள், வீடியோக்கள் வெளியானது.



இந்நிலையில்  இது தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், வருகின்ற 6.1.2021 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback