Breaking News

கண்டிப்பாக படியுங்கள்: வாட்ஸப்பின் புதிய பிரைவசி பாலிசி, மற்றும் விதிமுறைகள் என்ன?

அட்மின் மீடியா
0

தற்போது வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் (Terms of Service), தனியுரிமைக் கொள்கையையும் (privacy policy) புதுப்பித்து வருவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது அனைவருமே இந்த செய்தியை நேற்று பெற்றிருப்பீர்கள். பலரும் படிக்காமலே 'Agree' கொடுக்கவும் செய்திருப்பீர்கள். 


இந்த புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதாலும் அதற்க்கு அக்ரி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாட்ஸப்பை இயக்கமுடியாது அதனால் அதனை படிக்காமல் அக்ரி கொடுத்து இருப்பீர்கள்


இதனை படித்து பார்த்தவர்கள் அனைவரும், இனி வாட்ஸ் அப்பில் நமது தகவல்கள் பாதுகாப்பாக இருப்பது கேள்விக்குறிதானா என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.இதில் மேலும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த பிரைவசி பாலிசியை Accept செய்வதை விட்டால் உங்களுக்கு வேறு வழி இல்லை. இல்லையென்றால் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியாமல் போகும். 


தற்போது வாட்ஸப் தன் புதிய விதிமுறையில் அதன் மீடியா ஃபைல்களை தங்கள் சர்வர்களில் வாட்ஸ் அப் எப்படி ஸ்டோர் செய்யப் போகிறது என்பதை இந்த பாலிசி விளக்கியுள்ளது.


இதுமட்டுமல்லாமல் அந்நிறுவனம் தகவல்களை ஃபேஸ்புக் உடன் பகிரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


நீங்கள் கணக்கு வைத்திருக்கும் மொபைல் எண், சேவை தொடர்பான தகவல்கள், Mobile device தகவல்கள், IP address உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் அப்பால் சேமித்து வைக்கப்பட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்படும். 


அதேபோல் நீங்கள் ஃபார்வேர்டு செய்யும் மெசேஜ்களையும் வாட்ஸ் அப் கண்காணிக்கவிருக்கிறது. போலி தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


மேலும் ஒரு பயனாளர் எப்படி வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார், எந்த மாதிரியான வசதிகளை பயன்படுத்துகிறார் (Status, Messaging, Calling), ஆன்லைனில் எப்போது இருக்கிறார் என நீண்டுகொண்டே செல்கிறது இந்தப் பட்டியல். 


இன்னும் விரிவாக அந்த தகவலை படிக்க 


https://www.whatsapp.com/legal/updates/privacy-policy/


https://www.whatsapp.com/legal/updates/terms-of-service

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback