Breaking News

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படுமா? கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது வாட்ஸ் அப்.

அட்மின் மீடியா
0

வாட்ஸப் பயனாளர்களின் தகவல்களை வணிக நோக்கில் பயன்படுத்தும் கொள்கையை அமல்படுத்துவதை வாட்ஸ்-அப் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.


வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய தனியுரிமை கொள்கையை வெளியிட்டது. அதில் வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு, ஃபேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவேண்டும் எனவும் இதற்கு அக்ரி அளிக்காதவர்கள் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு, வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.



இது தொடர்பாக அந்நிறுவனம் தனது blog-ல் விளக்கம் அளித்துள்ளது, 


அதில் 'எங்களின் சமீபத்தில் கொள்கை குறித்து பல தரப்பு மக்களிடமும் பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிகிறோம். மேலும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை எங்களால் பார்க்க முடியாது, நீங்கள் கால்கள் மூலம் பேசும் போது எங்களால் அதனை கேட்க முடியாது. உங்களிடம் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என நாங்கள் பதிவு எதையும் வைப்பதில்லை.நீங்கள் ஷேர் செய்யும் லொகேஷன்களை எங்களால் பார்க்க முடியாது, இது ஃபேஸ்புக்கிற்கும் செல்லாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வாட்ஸ்அப் தங்களது புதிய நிபந்தனைகளை நிறுத்திவைப்பதாகவும், பிப்ரவரி 8 ஆம் தேதியன்று யாருடைய வாட்ஸ்அப் கணக்கும் முடக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான வாட்ஸ்அப் நிபந்தனைகளை மே 15 ஆம் தேதி ஒத்திவைப்பதாகவும் கூறியுள்ளது. 


இதனை அடுத்து புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் பிப்ரவரி 8 முதல் தொடர்ந்து வாட்ஸ்அப் இயங்கும் என்பது உறுதியாகியுள்ளது

source:

https://blog.whatsapp.com/giving-more-time-for-our-recent-update


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback