FACT CHECK: வேளான் சட்டங்களுக்கு எதிராக கனடாவில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கனடா பிரதமர் பங்கேற்றாரா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மோசடிக்கு எதிராக.விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் கனடா பிரதமர். பாசிஸத்தின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிவரும்… விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட கனடா பிரதமர், பாஸிசம்வீழட்டும்” என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்தியாவில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது உண்மை
ஆனால்
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் போராட்டம் நடந்தது ஆனால் அதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொள்ளவில்லை
அப்படியானால் கனடா நாட்டு பிரதமர் உள்ள புகைபடம் உண்மையா ? அல்லது போட்டோஷாப் செய்யபட்டதா என ஆய்வு செய்கையில் புகைபடம் உண்மைதான் என தெரிய வந்தது
மேலும் இது குறித்து இணையத்தில் தேடுகையில் கடந்த 2015 ம் ஆண்டு கனடா நாட்டின் ஓட்டோவா குருத்வாராவில் சீக்கிய சமூகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கனடா பிரதமர் என இந்த புகைபடம் உள்ளது தெரிய வந்தது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி