Breaking News

FACT CHECK: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மரணம் என பரவும் பொய்யான செய்தி!!!!

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மரணம் லைவ் வீடியோ என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவர் மயக்கம் மட்டுமே அடைந்தார் ஆனால் அவர்  உயிரிழந்துவிட்டதாக பரவும் தகவல்களில் உண்மை எதுவும் இல்லை
 
 
 அந்த தடுப்பூசி போட்டு கொள்ளும் பெண் டிஃபானி பாண்டிஸ் டோவர் 
 அவர் ஒரு செவிலியர் ஆவார்

 
மயக்கம் தெளிந்தவுடன் அவர் ஓர் வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் தான் நலமுடன் உள்ளதாகவும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் தனக்கு சிறுது மயக்கம் ஏற்பட்டது அவ்வளவுதான் அது சாதாரணமானது தான் எனவும் விளக்கம் அளித்துள்ளார்
 
 கொரோனா தடுப்பூசி போட்டதால் செவிலியர் டிஃபானி இறந்துவிட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே. நம்பவேண்டாம்.
 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 https://www.usatoday.com/story/news/factcheck/2020/12/23/fact-check-nurse-who-fainted-after-being-vaccinated-alive/4024424001/ 

 

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/CHIMemorial/posts/3496760423754504

 

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=tOH7XLHl2mo&feature=emb_title

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback