Breaking News

FACT CHECK: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி மகள் புற்று நோயால் மரணம் என்று பரவும் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடியின் மகள் ரத்த புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்  என்று  ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் கடந்த 2016 ம் ஆண்டு அவரது மகள் உடல் நலகுறைவால் மருத்துவ மனையில் இருந்த போது எடுக்கபட்ட படம் ஆகும்

அப்போதும் அவர் மகள் இற்ந்துவிட்டர் என செய்தி பரவியது அதனை அப்ரிடி மறுத்துள்ளார்

இந்த நிலையில் தற்போதும் அப்ரிடி மகள் இற்ந்துவிட்டார் என செய்திகள் பரவிய நிலையில்  தன்னுடைய மகள் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அப்ரிடி மறுத்துள்ளார் என்றும் தன்னுடைய மகள் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் அவர் கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this