Breaking News : தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது?.. முதல்வர் பழனிசாமி விளக்கம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரோனா தொற்று நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பதுபற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அரியலூரில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு செய்தநிலையில், பெரம்பலூரிலும் ஆய்வை மேற்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,
உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டி உள்ளது. பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்; அதற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்
Tags: தமிழக செய்திகள்