Breaking News

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..!

அட்மின் மீடியா
0

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் சிலருக்கு புகைப்படம் மாறி வந்து இருக்கும். இதை ஆன்லைன் மூலம் எப்படி மாற்றலாம்   என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க



குடும்ப தலைவர் புகைப்படத்தினை நேரடியாக மாற்றம் செய்ய முடியாது.அதற்க்கு நீங்கள்  குடும்ப தலைவராக ஆண் இருந்தால் அதை நீக்கம் செய்துவிட்டு வீட்டின் பெண்ணை கார்டில் சேர்த்து அப்லோட் செய்து சம்மிட் செய்தால் எளிமையாக புகைப்படத்தினை மாற்றிவிடலாம்.


அதற்க்கு முதலில் நீங்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லவும்.


அதில் குடும்பதலைவர் மாற்றம் செய்ய என்பதை கிளிக் செய்து உள் செல்லுங்கள் 

அடுத்து குடும்ப அட்டையுடன் இணைத்து உள்ள மொபைல்  எண்ணை கொடுத்து லாக் இன் செய்து கொள்ளுங்கள் 


அடுத்து அதில் பெயர்களுக்கு அருகில் உள்ள  பென்சில் ஐக்கானை க்ளிக் செய்து அவற்றில் உறவு முறையினை சரியாக தேர்வு செய்து டிக் கொடுக்கவும்.

அடுத்து குடும்ப தலைவரின் புகைப்படத்தினை அப்லோடு செயுது கொள்ளுங்கள்

அவ்வளவுதான் அடுத்து பதிவேற்று என்ற ஆப்ஷன் வரும். க்ளிக் செய்த பிறகு குறிப்பு எண் ஒன்று கொடுப்பார்கள். அந்த எண்ணை வைத்து நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback