Breaking News

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முதலமைச்சரிடம் ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் பூஜ்யம் கல்வியாண்டு? என்றால் என்ன?

அட்மின் மீடியா
0
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.பின்னர் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, 


கிராமங்களை நோக்கி மருத்துவர்கள், செவிலியர்களுடன் 2000 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52.47 லட்சம் மடிக்கணிணி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். 

பூஜ்யம் கல்வியாண்டு என்றால் என்ன? 

ஒரு கல்வியாண்டு முழுவதையும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு ஆகும். அதன்படி, பள்ளிகள் திறக்கப்படாது. பாடங்கள் நடத்தப்படாது. தேர்வுகள் நடக்காது. உதாரணமாக 2019-20ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு படித்திருந்தால் நடப்பு கல்வியாண்டு எந்த வகுப்பும் படிக்கவில்லை என்று கருதப்படும். அடுத்ததாக 2021-22ஆம் கல்வியாண்டில் தான் இரண்டாம் வகுப்பிற்குச் செல்வார்கள். 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback