Breaking News

பொது இடங்களில் இலவச வைஃபை.. மத்திய அரசு ஒப்புதல்!

அட்மின் மீடியா
0

பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் வைஃபை சேவை வழங்க ஒப்புதல்பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. 


 

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், பொது இடங்களில் எந்தவொரு கட்டணமும் விதிக்காமல் பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் மிகப்பெரிய வைஃபை சேவை வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக நாடு முழுவதும் பொது தரவு மையங்கள் திறக்கப்படும். இதற்கான உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் இருக்காது இந்த திட்டத்திற்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என கூறினார்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback