திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
டிச.19ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
அதிகபட்சம் 50 சதவிகித அளவுக்கு மிகாமல், பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள், 19.12.2020 முதல் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.
இந்தக்கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சி காவல் துணை ஆணையரிடமும் உரிய அனுமதி பெறுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளி கடைபிடித்து அதிகபட்சம் 50%-த்திற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் சமூக, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு, மதம்சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. pic.twitter.com/b0Jy5xf7ST
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 16, 2020
Tags: தமிழக செய்திகள்