BREAKING :வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்: பினராயி விஜயன் அதிரடி
அட்மின் மீடியா
0
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிப்பது தொடர்பாக கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்தால் கேரளத்தை கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும்,மற்ற மாநிலங்கள் உணவுப் பொருள்களை நிறுத்தினால் கேரள மக்கள் பட்டினி கிடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை எனவும் பேரவையில் முதல்வர் கூறினார்.
Tags: இந்திய செய்திகள்