இலங்கையில் கரையை கடந்து பாம்பனை நெருங்கிய புரேவி புயல் இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும்
இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் புரேவி மையல் மையம் கொண்டிருந்தது. இப்புயல் இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு கரையை கடக்க தொடங்கியது.
இலங்கையின் திருகோணமலை அருகே, நேற்றிரவு 10.30 முதல் 11.30 மணிக்கு புரெவி புயல் கரையை கடந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த போது, 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்துள்ள புரெவி மன்னார் வளைகுடாவில் நுழைந்தது. தற்போது இந்த புயல் தமிழ்நாட்டின் பாம்பன் துறைமுகத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 90 கி.மீ. தொலைவில் உள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் பாம்பனை மிகவும் நெருங்கி வந்துவிடும் புரேவி புயல்இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
Tags: தமிழக செய்திகள்