Breaking News

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்!

அட்மின் மீடியா
0

சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் மக்கள் அனைவரும் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.




இன்று முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அனைவரும் செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 

பயணிகள் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback