அமீரகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி..!! எங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்!! முழு விவரம்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சீன நிறுவனத்தை சேர்ந்த சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது
இந்த தடுப்பூசியானது அபுதாபி SEHA-வினால் நடத்தப்படும் அனைத்து கிளினிக்குகள், தனியார் மருத்துவ நிறுவனங்களான VPS ஹெல்த்கேர் மற்றும் NMC மருத்துவமனைகளுக்கு சொந்தமான அனைத்து மையங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில்
துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் கள மருத்துவமனையில் (Dubai Parks and Resorts Field Hospital)
ஷார்ஜாவில்
வசித் மருத்துவ மையத்தில் (Wasit Medical Centre in Sharjah) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி சேவையானது கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜ்மானில்,
மக்கள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் அல் ஹுமைதியா மையத்திற்கு (Al Humaidiya Centre) சென்று தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம்
உம் அல் குவைன் மற்றும் ஃபுஜைராவில்
அல் பைத் மெட்வாஹித் மையம் (Al Bait Metwahid centre) மற்றும் முராஷித் மருத்துவ மையத்தில் (Murashied Medical Centre) தடுப்பூசி சேவைகள் கிடைக்கிறது
தடுப்பூசியினைப் போட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் தாங்கள் செல்லவிருக்கும் மருத்துவ மையத்திற்கு முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசி சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு சென்று தடுப்பூசி பெறும் நபர்கள் 21 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவ மையத்திற்கு சென்று தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸை (dose) பெற்றுக்கொள்ள வேண்டும்
முன்பதிவு செய்ய:
VPS Healthcare facilities, helpline number 8005546
WhatsApp 0565380055
http://www.covidvaccineuae.com/
source:
Tags: வெளிநாட்டு செய்திகள்