நிலவில் தேசியக் கொடியை ஏற்றிய சீனா சாதனை
அட்மின் மீடியா
0
சீனாவின் சாங்கி-5 விண்கலம் கடந்த நவ.23-ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவில் மணல் மற்றும் கற்களை சேகரித்து வருவதற்காக அந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த டிச.1-ஆம் தேதி அந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்நிலையில் சாங்கி-5 விண்கலத்தின் பயணத்தின்போது நிலவில் 2 மீட்டா் அகலம், 90 செ.மீ. நீளம் கொண்ட தனது தேசியக் கொடியை சீனா ஏற்றியுள்ளது. நிலவில் ஏற்றிய தேசியக் கொடி புகைப்படத்தை சீன தேசிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்