60 வயதிற்க்கு மேல் பாதி விலையில் விமான டிக்கெட் ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இந்தியாவை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம், பயணச்சீட்டு தொகையில் 50 சதவீதம் சலுகையை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானம், மூத்த குடிமக்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 50 சதவீத சலுகையை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் 50 சதவீதம் சலுகை பெறப் பயணிகள் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது
ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்