தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
31 ஆம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும்,
1 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும்,
2 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும்,
3 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்